குளம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
🕔 September 2, 2016



– எம்.ஜே.எம். சஜீத் –
பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட செல்வவெளி, சோளம் குளம் நீர்பாசனப் குளம், சட்ட விரோதமாக சுவிகரிக்கப் படுவதை எதிர்த்தும், அந்தக் குளத்தை புனரமைத்து தருமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் பொத்துவில் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பிரதேச செயலகம் வரை சென்றது. இதன்போது, விவசாயிகள் பல்வேறு விதமான வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலகத்தினையடைந்த விவசாயிகள், அங்கு பிரதேச செயலாளர் எம்.என்.எம். முஸரப்பிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்தனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவிப்பதோடு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சுமூகமான தீர்வை பெற்றுதருவதாக பிரதேச செயலாளர் இதன்போது வாக்குறுதியளித்தார்.




Comments

