சகீப் சுலைமான் கடத்தல், கொலை விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது

🕔 September 2, 2016

Sakeeb sulaiman - 09ம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், இன்று வௌ்ளிக்கிழமை காலை கைப்பற்றப்பட்டது.

கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, குறித்த வேன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகீப் சுலைமான், பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள அவரின் வீட்டின் முன்னால் வைத்து, கடந்த 21 ஆம் திகதி  கடத்திச் செல்லப்பட்டார்.

பின்னர், அவரின் சடலம் மாவனல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

சகீப் சுலைமான் கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்