வேன் – பஸ் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட, ஐவர் பலி

🕔 September 2, 2016

VAn - Bus - accident - 02லேவெல – தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் பலியானதோடு, 07 பேர் காயமடைந்துள்ளனர்.

குருணாகல் – தம்புள்ள பிரதான வீதியின் கலேவெல, தொலமகொல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

வேன் ஒன்றும் – பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்தில் நான்கு வயது குழந்தையொன்றும் பலியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.VAn - Bus - accident - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்