இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு

🕔 September 2, 2016

Ban ki-moon - Maithiri - 01லங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில்  சந்தித்தார்.

தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அனைத்து மாகாணங்களுக்கும் நியாயமான அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாகவும் பான் கீ மூன் உறுதியளித்துள்ளார்.

இதன்போது, புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளர் நாயகத்திடம் விளக்கியுள்ளார்.

இம்மாதம் நடைபெற உள்ள ஐநா பொது சபை கூட்டத் தொடரில் சர்வதேச சமூகத்துடன் உள்ள உறவுகளை மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பு தனக்கு தோன்றியுள்ளதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்