விமல் வீரவன்சவின் சகோதரர் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார்.
கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.