கிழக்கு மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, ஆளுந்தரப்புக்கு மாறினார்

🕔 August 25, 2016

Manjula Fernando - MPC - 011(கே.ஏ. ஹமீட்) 

கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, சற்று முன்னர், ஆளும் தரப்புக்கு மாறியுள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் 62 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை, சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, இதுவரை எதிரணியில் இருந்துவந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, சற்று முன்னர் ஆளும் தரப்புக்கு சென்று, அங்குள்ள ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

Comments