பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு

🕔 August 25, 2016

Saheeb - Sulaiman - 011டத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீம் சுலைமான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டு முன் வாயிலில் வைத்துக் கடத்திச் செலப்பட்டிருந்தார்.

மாவனல்ல -ருக்லாகம பிரதேத்திலுள்ள ஹெம்மாதுகம வீதியில் நேற்று புதன்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்து.

இறந்தவரன் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினார்கள். சடலம் தொடர்பான மரணப் பரிசோதனை வியாழக்கிழமை இன்று நடைபெறவுள்ளது.

மேற்படி வர்த்தகரின் வீட்டு முன் வாயிலில் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

இவரை விடுவிப்பதற்கு கடத்தல்காரர்கள் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரியதாக,  உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

சடலம் மீட்கப்பட்ட பிரதேசத்திலிருந்தே, கப்பம் கோரியவர்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.

இதனையடுதது கடத்தல்காரர்களை பற்றிய விபரத்தை அறியத்தருவோருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என, குறித்த வர்த்தகரின் தந்தை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்