எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது

🕔 August 24, 2016

Janaka wakumpara - 01ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வகும்பர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும்,  ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் ராஜநாமாச் செய்திருந்தனர்.

இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின் இடத்திற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும், பந்துலவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி திலகசிறியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, தற்போது ஜனக வகும்பரவின்  ராஜிநாமா அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்