நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு
🕔 August 6, 2016
– பாறுக் ஷிஹான் –
நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக பல தரப்பு பிரதிநிதிகளும் பிரசன்னாகி, தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் ஊடகவியலாளர்கள் என, பல தரப்பினரும் கலந்து கொண்டு, தனது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது காணாமல் போனோர், யுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் தமது கருத்துக்களை யாழ் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.