முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அரசாங்க வாகனத்தை திருப்பிக் கையளிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பியசேனவை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக்கியபோது, அவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.