மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

🕔 July 29, 2016

'Jana Satana' March - 0987ஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நடவடிக்கை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பித்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் இந்தப் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கண்டி தலதா மாளிகையில் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரை சென்ற நிலையில், நேற்றைய தினம் பாத யாத்திரை நிறுத்தப்பட்டது.

ஐந்து நாட்கள் திட்டமிடப்பட்டுள் இந்தப் பாத யாத்திரையானது, கொழும்பு வரையிலும் கொழும்பில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்