யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது
🕔 June 19, 2015



– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, போதை தரும் பாக்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில், நேற்று வியாழக்கிழமை – இரண்டு சந்தேக நபர்களை, யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
தரம் 07 இல் கல்வி கற்கும் 06 மாணவர்களுக்கு மேற்படி சந்தேக நபர்கள், போதை தரும் பாக்குகளை விற்பனை செய்ததாகத் தெரிய வருகிறது.
மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்யப்படும் தகவல் அறிந்து, நேற்றைய தினம் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து – குறித்த பாடசாலைக்குச் சென்றிருந்தனர். இதன்போது, மாணவர்களிடமிருந்து பாக்குகளை கைப்பற்றியதுடன், மாணவர்களிடம் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பாக்கு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைக்கிணங்க, மானிப்பாய் வீதி ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இரண்டாவது சந்தேக நபரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


Comments



