நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஷவை, இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார்.
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
ரக்பி விளையாட்டுப் போட்டி ஒன்றினை ஒழுங்கு செய்த க்ரீஸ் என்ற நிறுவனம், 2013ம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக கூறப்படும் எழுபது மில்லியன் ரூபா பணம், வேறொரு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், பணச்சலவை சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.