நாமல் ராஜபக்ஷ கைது

🕔 July 11, 2016

Namal - 0865நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே இவரின் கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல், இவர் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடி தொடர்பில், இதற்கு முன்னரும் நாமலிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாரிய நிதி மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பன வாக்குமூலங்களை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்