ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம்

🕔 July 11, 2016


Monk - Batti - 099
னாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் ஒன்றினை, மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி, அடித்து நொறுக்கியுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தரவில்லை என்கிற காரணத்தினால், ஆத்திமடைந்த அவ் விஹாரையின் விஹாராதிபதி, இவ்வாறு செயற்றபட்டுள்ளார்.

மட்டக்களப்பு உள்ளூர் விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சென்றிருந்தார். இதன்போது அவரை குறித்த விஹாரைக்கும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஜனாதிபதி அங்கு செல்லாததால், விஹாராதிபதி ஆவேசமடைந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை உடைத்தெறிந்துள்ளார்.

எனினும், விஹாரைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நேரம் கிடைக்கும் போது மாத்திரமே ஜனாதிபதி செல்வதாகவும், எவ்வாறெனினும் மங்களராம விஹாரையிலிருந்து ஜனாதிபதிக்கு அவ்வாறான அழைப்பு கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, விஹாராதிபதியின் இச் செயற்பாடு வேதனைக்குறியதென, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன தெரிவித்துள்ளார்.Monk - Batti - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்