ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு
🕔 July 10, 2016
– அஸ்ஹர் இப்றாஹிம், எம்.வை. அமீர் –
கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ‘ஐந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாபபூசணம் ஏ. பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹம்மத் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில், கலாநிதி யூ.பாறூக் விசேட உரையினையும் , தீரன் ஆர்.எம் நௌஸாத் கவி நயத்தலையும் வழங்கினர்.
பேராசிரியர் சி. மௌனகுரு நூலின் முதற் பிரதியினை நூலாசிரியரின் தாயார் பல்கீஸ் உம்மாவிற்கு வழங்கி வைத்து, நூல் பற்றிய கருத்துரையினை வழங்கினார்.
இதேவேளை, பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் – நூல் ஆய்வினையும் ,வைத்திய கலாநிதி புஸ்பலதா லோகநாதன் கருத்துரையினையும் ஆற்றினர்.