மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்
🕔 July 7, 2016



– முன்ஸிப் –
‘கிழக்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘மு.கா. தலைமை கிழக்கிற்கு வேண்டும்’ எனும் வாசகமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.
குறித்த சுவரொட்டியில், கிழக்கின் எழுச்சி தலைவராக – முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப பொருளாளரான வபா பாறூக்கின் படம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் – மேற்படி வபா பாறூக் மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும் எனும் கோஷத்துடன், கிழக்கின் எழுச்சி எனும் வேலைத் திட்டமொன்று, அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையிலேயே, தற்போது – அம்பாறை மாவட்டமெங்கும் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


Comments



