சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு

🕔 July 6, 2016

Prayer - Samma - 02
– யு.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகையில், பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும், பிரசங்கத்தினையும் நிகழ்த்தினார்.

இதன்போது உலக நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் துன்பங்களில்
இருந்து மீளவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இவ்வாறு, அம்பாறை மாவட்டத்தில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை பல இடங்களில் இடம்பெற்றன.

வெளிகளிலும், பள்ளிவாசல்களிலும் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டன.

இவற்றில் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.Prayer - Samma - 01

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்