பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி
– எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் சுற்று மதில் நிர்மாணப் பணியின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதற்கான பணத்தினை, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், யஹ்யாகான் பௌண்டேசன் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ். நபார் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று திங்கட்கிழமை – குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்ய யஹ்யாகான், சுற்று மதில் நிர்மாணிக்கப்பட வேண்டி இடத்தினைப் பார்வையிட்டார்.
இதனையடுத்து, குறித்த சுற்று மதிலின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்காக, தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகைப் பணத்துக்கான காசோலையை, அங்கு வைத்தே அதிபரிடம் யஹ்யாகான் வழங்கினார்.