மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்

🕔 July 4, 2016

Yahyakhan - 876
– எம்.வை. அமீர் –

ள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போட்டியிடுவேனே தவிர, வேட்புமனு ஆசனம் கேட்டு யாரிடமும் மண்டியிட மாட்டேன் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார்.

யஹ்யாகான் பௌண்டேசன் வழங்கும் நிதியுதவியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவீர்களா என வினவுகிறார்கள். நான் எனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறேன். அதுபோன்று பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி விடயங்களிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறேன்.

மக்கள் நலன் தொடர்பாக என்னால் செயற்படமுடியும் என்று மக்கள் நம்பும் அதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனமும் எனக்கு வழங்கப்படுமானால் அரசியல் களத்தில் குதிப்பேன். ஆனால், இதற்காக யாரிடமும் மண்டியிட மாட்டேன். 

கடந்த காலங்களில் உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் கூறத்தேவையில்லை. மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தொடராக மக்களை ஏமாற்ற முடியாது. யார் மக்கள் நலத்திட்டங்களில் தங்களை பூரணமாக அர்ப்பணித்துச் செயற்படுவர் யார் என்பதை கட்சி யோசிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் அரசியல் செய்வது என்பது போராட்டமாகவே இருக்கும். எனவே, தங்களால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என நினைப்பவர்களே  அந்த பாத்திரத்தை தங்களது கைகளில் எடுக்க வேண்டும். மக்கள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். எதிர்காலம் போட்டி நிறைந்ததாகவும் இருக்கும். மக்களை ஏமாற்ற முடியாது’ என்றார்.Yahyakhan - 877

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்