அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு
🕔 July 4, 2016
– பாறுக் ஷிஹான் –
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக அல் குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் பிரதிநிதிகளினால் மேற்படி குர்ஆன் பிரதிகள் கையளிக்கப்பட்டன.
இதில் சுமார் 16 பள்ளிவாசல்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தலா ஒரு குர்ஆன் பிரதி வீதம் வழங்கப்பட்டது.
இதன் போது அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம். அன்வர் அமைச்சரின் மக்கள் தொடர்புகள் ஒருங்கிணைப்பாளர் முஜாஹீத் மற்றம் யாழ் மாவட்டத்துக்கான அமைச்சரின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்குரிய இணைப்பாளர் பி.எஸ்.எம். சுபியான் மௌலவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.