ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

🕔 June 26, 2016

Gnanasara thero - 01பொதுபல சேனா அமைப்பின் தலைவர் அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மீண்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு, இலங்கை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாட்டுக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து, அளுத்கம சம்பவம் போன்று மீண்டும் ஏற்படுமென ஞானசாரர் எச்சரித்ததாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அளுத்கம சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில், அதற்கெதிராக இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஞானசாரர் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென, இலங்கை முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்