மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு

🕔 June 26, 2016

President - Nuwareliya - 016
– க. கிஷாந்தன் –

து ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி, ஜனாதிபதியயின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் – மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, நுவரெலியாவில் மேற்படி கூட்டம் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா  மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

மது ஒழிப்பு தொடர்பான கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இதன்போது மேடையேற்றப்பட்டன.

நுவரெலிய மாவட்ட மட்டத்தில், மது ஒழிப்பு தொடர்பிலான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றீட்டியவர்களுக்கும், மது ஒழிப்பு தொடர்பாக சிறந்த முறையில் சேவையாற்றிய பொலிஸார் மற்றும் ராணுவத்தினருக்கும் இதன்போது ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.President - Nuwareliya - 015 President - Nuwareliya - 014 President - Nuwareliya - 013 President - Nuwareliya - 012

Comments

புதிது பேஸ்புக் பக்கம்