10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன.
மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிலுள்ள விருப்புகளை மைத்திரி எட்டுவதற்கு, ஆயிரத்துக்கும் குறைவான விருப்புக்களே தேவையாக உள்ளன.
மைத்திரியின் பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின் பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.