வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

🕔 June 18, 2016

Explosives - Vavuniya - 098வுனியாவில் காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

வவுனியா பாலம்பிட்டி காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருள்கள் விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கண்ணி வெடிகள் 74, மோட்டார் குண்டுகள் 06 மற்றும் 03 கைக்குண்டுகள் இவற்றில் அடங்குகின்றன.

வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம், போர்க்காலத்தில் புலிகளின் பதுங்கு குழியாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததாக, விமானப் படையினர் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்