இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்

🕔 June 18, 2016

Hakeem - Pulmottai - 095
தி
ருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இதில் புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கனவே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கான நீர் குழாய்களையும் அமைச்சர் ஹக்கீம் திறந்துவைத்தார்.

வளைகுடா நாட்டு நன்கொடையாளர் பைஸல் மிலாரியின் அனுசரனையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம்.லாஹீர், நிதா நிறுவனத்தின் பொறுப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவருமான மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.Hakeem - Pulmottai - 097 Hakeem - Pulmottai - 096

Comments

புதிது பேஸ்புக் பக்கம்