அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம்

🕔 June 15, 2016
Uthumalebbe - 01– றிசாத் ஏ காதர் –

ம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பில், ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவானார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அதாஉல்லா ஆதரவு வழங்கியமை காரணமாக, கிழக்கு மாகாண சபையில் உதுமாலெப்பை வகித்த அமைச்சர் பதவியானது, ஆட்சி மாற்றத்தை அடுத்து பறிபோனது.

ஆயினும், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பில் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் இணைந்துகொண்டுள்ளதோடு, கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரியுடன் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா – புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்