யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம்

🕔 June 11, 2016

Elephant attack - 012ந்தளாயில்  குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது.

கந்தளாய் – அக்போபுர பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற குமார (வயது 42) என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் குளத்துக்கு மீன் பிடிக்க செல்லும் வழியிலேயே  யானை  தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கன்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  அக்போபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்