கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

🕔 June 10, 2016

Ranil - 086
கி
ழக்கு மாகாண சபைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடலிலும் பங்கேற்றார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் இன்று முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில்  மாகாண முதலமைச்சின்  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் கலந்  கொண்டு பேசுகையில்,  கிழக்கு மாகாணத்தை எல்லா துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்கான தனது திட்டத்தினை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலாபதி, பிரதி தவிசாளர் இந்திரகுமார், மாகாண அமைச்சர்களான ஆரியவதி கலபதி, ஏ.எல்.எம். நசீர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.Ranil - 087

Comments

புதிது பேஸ்புக் பக்கம்