அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு

🕔 June 10, 2016

Ranil - 0998வெள்ளத்தாலும், கொஸ்கம வெடி விபத்தினாலும் அழிவடைந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குரிய நிதியினை வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நேற்று வியாழக்கிழமை அவர் இந்த உத்தரவினை வழங்கினார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளை அமைப்பதற்கான நிதியினை வழங்கும் வரை, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதை முன்னுரிமைப்படுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, பிரதமர்இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொஸ்கம சம்பவத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு, வீடுகளை நிர்மாணத்துக் கொடுப்பதற்காக பெருமளவு நிதி தேவையாகப்படுவதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதுவரையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியினை வழங்க வேண்டாம் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்