மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி

🕔 June 9, 2016

Ravi - 099நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வியடைந்தது.

மேற்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது, பிரேரணைக்கு ஆதவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன.

அந்தவகையில் 94 வாக்குகளால் பிரேரணை தோல்வியடைந்தது.

வாக்கெடுப்பின் போது மஹிந்த ராஜபக்ஸ, த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆறுமுகன் தொண்டமான், சந்திர ஸ்ரீ கஜதீர, மற்றும் ஸ்ரீலத் தம்லத் உட்பட 28 பேர் நாடாளுமன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.

மேலும் இதன்போது ஈ.பி.டி.பி யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாக, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

ஜே.வி.பி. உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்