தகவல் அறியும் சட்ட மூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்; அமைச்சர் கயந்த

🕔 June 9, 2016

Gayanda karunathilaka - 032
கவல் அறியும் சட்­ட­மூலம் எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ­நிறை­வேற்­றப்­படும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில்அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

“தகவல் அறியும் சட்­ட­மூலம் நாடாளு­மன்­றத்தில் எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாதிக்கப்ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் அன்­றைய தினம் விவாதம் நடத்­தப்­பட்டு சட்ட­மூ­லத்தை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது நீண்­டநாள் செயற்பாடாக இருந்­தது. அதன்­படி எதிர்­வரும் 21 ஆம் திகதி இந்த சட்­ட­மூலம் நிறைவேற்­றப்­படும்.

எமது அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் பய­ணிக்­கின்­றது. தற்­போது நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் கடந்த காலத்தில் நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ரா­க­ நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வர முடி­ய­வில்லை. காரணம் கடந்த காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராக இருந்தார். எனவே, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்