சேதமடைந்த வீடுகள், அரசாங்க செலவில் திருத்தப்படும்; அமைச்சர் யாப்பா

🕔 June 6, 2016

Kosgama - 9764கொஸ்கம ராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த வீடுகள் அனைத்தும், அரசாங்க செலவில் திருத்தியமைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அவர் இத்தீர்மானத்தை அறிவித்ததாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கொஸ்கம சம்பவத்தால் மூடப்பட்டுள்ள கொழும்பு – அவிஸாவளை பிரதான வீதியை திறப்பதற்கு, இன்னும் 48 மணித்தியாலங்கள் ஆகுமென மேற்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான ராணுவ படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்