1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ

🕔 June 2, 2016

Thissa witharana - 09லங்கை விமானப்படைக்கு 400 மில்லியன் டொலர் செலவில் எதற்காக யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அவர் இதைக் கேட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;

“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 1500 மில்லியன் டொலரை இலங்கை அரசாங்கம் கடனாகப் பெறவுள்ளது.

இவ்வாறு பெறும் நிதியிலிருந்து 400 மில்லியன் டொலருக்கு, யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், மில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டு யுத்த விமானங்களை வாங்குவதற்கு, நாட்டில் இன்னமும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது இலங்கைக்கு வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இருக்கிறதா” என கேள்வியெழுப்பினார்.

இதேவேளை, அமெரிக்க கடற்படையின் ஏழாவது பிரிவு, திருகோணமலைத் துறைமுகத்தை தமது தளமாகப் பயன்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்