சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

🕔 May 31, 2016

Weappons - 009ட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன.

மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கொழும்பிலுள்ள பாதாள உலக கும்பலின் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் ஆமி சம்பத் மற்றும் புளுமெண்டல் சங்க ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,  இந்த ஆயுத களஞ்சியசாலை பற்றிய தகவல்கள் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உதவுடன், இந்த ஆயுதக் களஞ்சியங்கள் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்