தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு
– எம்.வை. அமீர் –
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வரங்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
“தேசிய அபிவிருத்தியில் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழிக் கல்வியின் பங்கு” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கின் இணைப்பாளராக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸில் கடமையாற்றினார்.
மலேசியாவின் USIM பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் துல்கிபிலி பின் அப்துல் ஹனி இந்த ஆய்வரங்கில் முக்கிய பேச்சாளராகக் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேற்படி மூன்றாவது சர்வதேச ஆய்வரங்குக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆய்வாளர்களால் 62 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.