சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்
துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது.
மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை, பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தம்மிடம் இருக்கும் சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இவ்வாறு பொது மன்னிப்புக் காலத்திற்குள் ஒப்படைக்கப்படும் சட்டவிரோத துப்பாக்கிகள் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வது அல்லது தண்டணை வழங்குவது இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு உறுதி வழங்கியுள்ளது.