கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

🕔 May 27, 2016

Ranil - 012டற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு நியாயங்களைக் கேட்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணரட்ணவிடமும், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றினை பிரதமர் கோரியுள்ளார்.

ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும், இரு தரப்பின் விளக்கங்களையும், ஜனாபதிபதியிடம் பிரதமர் ஒப்படைக்கவுள்ளார்.

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி, மேற்படி பிரச்சினை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று, பிரதமர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்