சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

🕔 May 20, 2016

Extreme weather - 097நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றராக காணப்படும் என்றும் வானிலை அதிகாரி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்