நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

🕔 May 20, 2016

Ravi karunanayaka - 0976ரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“நிவாணரங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை குறைக்காது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறிய, நடுத்தர வர்த்தகர்களை வழமை நிலைக்கு கொண்டு வரவும், மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வரவும் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எதிரணியினர் மக்களை தவறாக வழி நடத்தும் கருத்துக்களை வெளியிட வேண்டாம். அமைச்சுக்களுக்கு தேவையானாலும் உதவி வழங்க முடியும்.

எனினும், இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பல நாடுகள் நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  தேவையான நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்