தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை
இந்தியாவின் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக மாபெரும் வெற்றியினைப் பெற்றுள்ளது.
அந்தவகையில், நடைபெற்று முடிந்த 232 தொகுதிகளிலும் இதுவரையில் 131 தொகுதிகளில் ஜெயலலிதாவின் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
118 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலே, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிணங்க, ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகின்றார்.
இந்த நிலையில், கருணாநிதியின் திமுக 89 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இதேவேளை, கடந்த சட்ட சபையில் எதிர்க்கட்சியாக இருந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக வுக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.
தன்னை தமிழ் உணர்வாளராக வெளிப்படுத்திக் கொண்டு தேர்தலில் குதித்த இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சியும், ஒரு ஆசனத்தினைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்துள்ளது.