சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு

🕔 May 18, 2016

Weather - 087
சீ
ரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 03 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் 81 ஆயிரத்து 216 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சீரற்ற காலநிலை காரணமாக 23 பேர் காயமடைந்துள்ளனர். 211 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 42 ஆயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 96 ஆயிரத்து 284 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கம்பஹா மாவட்டத்தின் களப்பிட்டிமுள்ள பிரதேத்தில் 135 மில்லி மீற்றர் எனும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியது.

நாட்டில் கடுமையான காலநிலை சீர் கேட்டினை ஏற்படுத்திய தாழமுக்கம், நாட்டிலிருந்து 400 கிலோமீற்றர் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.Weather - 088

Comments

புதிது பேஸ்புக் பக்கம்