மஹிந்த தரப்பு சு.கட்சி எம்.பி.கள் மைத்திரியுடன் சமரசம்; விமலின் கூட்டத்தையும் புறக்கணிப்பு

🕔 May 9, 2016

Wimal veeravansa - 097ன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரி தரப்பினருடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான சந்திப்புக்கள் தனிப்பட்ட ரீதியிலேயே இடம்பெறுவதாகவும் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த மேதினத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் கிருலப்பனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளும் வகையிலேயே, இந்த சமரச சந்திப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, மே தினக் கூட்டத்தின் பின்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தினை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு 11 மணித்தியாலங்கள் இருந்தபோது, இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று,  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து விட்டதாக, செய்திகள் கூறுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்