ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

🕔 April 13, 2016

Mahinda - 094ழத்தைஉருவாக்க வடமாகாண சபை எதிர்காலத்தில் முயற்சிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் வடமாகாண சபை முன்வைக்கும் யோசனைகளைப் பார்க்கும் போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், மாகாணங்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் எந்தவொரு மாகாண சபைக்கும்அதிகாரம் கிடையாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தென்மாகாணத்தைச் சேர்ந்த சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்,  நேற்று செவ்வாய்க்கிழமை தங்காலை, கால்டன் இல்லத்திற்கு விஜயம் செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்;

“வட மாகாண சபையில் யோசனைகள் கொண்டுவந்து ஈழ நாட்டினை உருவாக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறலாம்.

இது அவர்களின் முதலாவது நடவடிக்கை என்ற போதிலும், மாகாண சபைகளுக்கு நினைத்தாற்போல் தான்தோன்றித்தனமாக தீர்மானங்களை எடுக்க முடியாது.

அதுமாத்திரமன்றி வெவ்வேறு  மாநிலங்களை அமைக்கவோ, மாகாணங்களை இணைக்கவும், பிரிக்கவும் மாகாண சபைகளுக்கு முடியாது. அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வட மாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது.

எனவே இவ்வாறான ஒரு நிலைமையில், நல்லாட்சி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பில் தெரியாது. ஆனாலும் இதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. நாட்டு மக்களும் இதற்கு அனுமதி வழங்கப் போவதுமில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்