சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார்

🕔 April 4, 2016

Liquor shop - 09– முஜீப் இப்றாகிம் –

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு மதுபானசாலைகளை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த விபரங்களை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் சமர்ப்பித்தார்.

தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபானசாலைகளை நடத்துவதற்கு இதுவரையில் 1168 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த 10 பேரும், எதிரணியிலுள்ள 30 பேரும் மதுபானசாலைகளை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் பெயரில் மேற்படி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்