விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

🕔 April 5, 2016
Arrestசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.

விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு அதிபர் தாக்கியுள்ளார்.

இந்த ஆசிரியையின் பிள்ளைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் ஆசிரியை கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்புத் தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்