தலைப்புச் செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் 07 ஆயிரம் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7,000 வைத்தியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக, புதிதாக பூர்த்தி செய்யப்பட்ட ஆட்சேர்க்கை திருத்தத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் (DMS) புதுப்பிக்கப்பட்ட பணியாளர் மீள்திருத்தத்தை – இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் சமர்ப்பிக்கவுள்ளதாக, சபையில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2017 ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு பணியாளர் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டார், தற்போதைய சுகாதார கோரிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்திய திருத்தம் விஞ்ஞான அடிப்படையில் நடத்தப்பட்டது.

2017 பணியாளர் கட்டமைப்பின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, அரச சுகாதாரத் திணைக்களம், ஏற்கனவே 136 விசேட மருத்துவர்கள், 1,683 வைத்தியர்கள் மற்றும் 2,619 தாதியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியவுடன், 7,000 வைத்தியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2027 மற்றும் 2029 க்கு இடையில் கட்டம் கட்டமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.