
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தார் பிரதமரை வொசிங்டனில் சந்தித்த பிறகு, அவர் இதனைக் கூறினார்.
ஈரானின் ராணுவத்தை அமெரிக்கா அழித்துவிட்டது என்று, திங்களன்று நடந்த ஒரு திடீர் ஊடக சந்திப்பில அவர் குறிப்பிட்டார். ஆனால், மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதன் நட்பு நாடுகளிடமிருந்து அவர் அழுத்தம் எதிர்கொள்வதை அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தின.
“ராணுவ ரீதியாக ஈரான் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது,” என்று கூறிய ட்ரம்ப். “நாங்கள் தற்போதைய நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம், மேலும் அவர்களின் அண்டை நாடுகளின் வேண்டுகோளின் பேரிலேயே நாங்கள் அதைச் செய்கிறோம்” என்றார்.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி ஆகியோருடன் நடைபெற்ற – மூடிய அறை சந்திப்பைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த விடயங்களைக் கூறினார். அச்சந்திப்பில் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இந்த முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
“பிராந்தியத்தின் நிலைமை குறித்தும், அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” என்று கத்தார் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் “ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கும், பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கும் நடைபெற்ற நேர்மறையான கலந்துரையாடல்களுக்கு நன்றி” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தொடர்வதும், தரைவழி மற்றும் காஸ்பியன் கடல் வழியாக நடைபெறும் வர்த்தகத்தைத் துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிதாக அறிவிக்கப்பட்ட டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட் நடவடிக்கையும் “தற்போதைய நிலையில்” தொடரும் என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
தேவை ஏற்பட்டால், போரை மீண்டும் தொடங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் தனது ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
“ராணுவ நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகத் தெரியவில்லை, ஆனால் எந்தக் காரணம் மாறினாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் ஆயத்த நிலையில் இருக்கிறோம்” என்றார்.
இஸ்ரேலும் முழு மத்திய கிழக்கும் ஈரானிய ஆபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மோதலின் முடிவை நோக்கிய ஒரு உத்வேகத்தை நாம் காண்கிறோம். இது மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன் என, ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஈரானிய அதிகாரிகள் டிரம்பின் சமீபத்திய கருத்துக்களை கவனத்தை திசை திருப்பும் செயல் என நிராகரித்தனர்.
“ஈரான் மீதான போர் அமெரிக்க அரசாங்கத்தை ஏற்கனவே சீர்குலைத்துவிட்டது. ஆனால் அமெரிக்கா, நம்பிக்கையிழந்த ஒரு சூதாட்டக்காரனைப் போலத் தடுமாறுகிறது” என்று ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் எழுதியுள்ளார்.



