
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோர் சந்தித்ததாகக் கூறப்படும் ஹோட்டலொன்றின், அறை முன்பதிவு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஹுங்கல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) இந்த பதிவு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரியூ ஹோட்டலில் இருந்து அந்தப் பதிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை வழங்குமமாறு – சிஐடி விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பிள்ளையானின் முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா, 2020 ஓகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில், அந்த ஹோட்டலில் சுரேஷ் சாலேயைச் சந்தித்ததாக சிஐடியிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்திப்பு குறித்த மௌலானாவின் கூற்றை விசாரிக்க சிஐடி அந்த முன்பதிவு ஆவணங்களைக் கோரியுள்ளது.
சுரேஷ் சாலே – ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



