தலைப்புச் செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் தொழிற் பயிற்சி கற்கையை நிறைவு செய்த 330 பேருக்கு, தொழிற் தகைமை சான்றிதழ் வழங்கி வைப்பு

– அஷ்ரப் ஏ சமத் –

தொழிற்பயிற்சி அதிகார சபையின் – அம்பாறை மாவட்டத்திலுள்ள 30 க்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்களில், 16க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி துறைகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 330 பேருக்கு, NVQ தொழில் தகைமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) சாய்ந்தமருதிருள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பி.எம். நளீம் தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் விஜித வீரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பயிற்சிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை பணிப்பாளர் சந்தன விதான பத்திரன, திட்டமிடல் மற்றும் தொழில் ஆராய்ச்சி பணிப்பாளர் ஏ. முகம்மட் ஜாபிர், பரீட்சைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் கனகசுந்தரம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.